ஒன்பதாயிரம் கோடி இந்திய ரூபாய் கடன் பெற்ற குற்றம் தொடர்பில் நாடுகடத்தலை எதிர் நோக்கியுள்ள தொழில் அதிபர் விஜய் மல்லையா, மேல்முறையீடு செய்திருந்த மனு, நிராகரிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்துமாறு இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்த நாடு கடத்தல் கோரிக்கையை ஏற்ற பிரிட்டன் நீதிமன்றம், விஜய் மல்லையாவை நாடு கடத்த உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிராக விஜய் மல்லையா மேல்முறையிட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நிராகரிக்கப்பட்டது. இதன் காரணமாக விஜய் மல்லையா விரைவில் நாடுகடத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் தற்போது அவரை இந்தியா அழைத்து வரும் முயற்சி தீவிரமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.