தேங்காய் பால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு சிலர் தேங்காய் பாலை கொழுப்பு நிறைந்த உணவாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இது தவறான தகவல் . தேங்காய் பால் உடலிலுள்ள சூடடை தணிக்கும். வயிற்று சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளுக்கும் நல்ல தீர்வினை கொடுக்கும்.
தேங்காய் பாலில் பலவிதமான உணவுகளை செய்து அசத்தலாம். அந்தவகையில் சுவையான தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி என்று இன்றைய சமையல் குறிப்பு பகுதியில் பார்ப்போம் . இதற்கு தேவையானவை.
அரிசி- இரண்டு கப்
தேங்காய்- பாதி (துருவியது )
வெங்காயம்- இரண்டு
பச்சைமிளகாய்- இரண்டு
இஞ்சி,பூண்டு- கால் தேக்கரண்டி
பட்டை- மூன்று
லவங்கம்- ஐந்து
ஏலக்காய்- மூன்று
பிரியாணி இலை- இரண்டு
கறி மசாலா பொடி- கால் தேக்கரண்டி
முந்திரி- ஐம்பது கிராம்
நெய்- நூறு கிராம்
புதினா- சிறிதளவு
கொத்தமல்லி- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு ஆகியனவாகும்.
தேங்காய் பால் சாதம் செய்வதற்கு தேங்காய் பாலை நான்கு கப் அளவிற்கு பிழிந்து எடுத்துக்கொள்ளவும். அடுத்து தேங்காய் பால் சாதம் செய்வதற்கான அரிசியை நன்றாக கழுவி தனியாக ஒரு பாத்திரத்தில் ஊற வைக்கவும்.
அவ்வாறு அரிசியை ஊறவைத்த பின் மிளகாய் மற்றும் வெங்காயத்தை நீண்ட வாக்கில் வெட்டிக்கொள்ளவும். இப்போது தேங்காய் பால் சாதத்திற்கு தேவையான அளவு கொத்தமல்லி , புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இப்போது அடுப்பில் குக்கரை வைத்து நூறு கிராம் அளவிற்கு நெய் ஊற்றி அது நன்கு சூடானதும் அதில் பட்டை , லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். அதன் பின் பச்சை மிளகாய் , இஞ்சி பூண்டு, வெங்காயம், புதினா சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை நன்றாக வதக்கி விடவும்.
வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு அதில் தேங்காய் பால், கறி மசாலா பொடி , மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
அடுத்து குக்கரில் அரிசியை சேர்த்து குக்கரை மூடி விசில் வரும் வரை வேக வைக்கவும். பின்னர் பத்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து இறக்கவும்.
மீதம் உள்ள நெய்யில் முந்திரியை வறுத்து சாதத்துடன் சேர்த்து கிளறவும். இதனுடன் கொத்தமல்லி இலையை சேர்க்கவும். அவ்வளவே தான் சுவையான தேங்காய் பால் சாதம் ரெடி.
எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி சுவை மிகு தேங்காய் பால் சாதம் செய்து உண்டு மகிழலாம்.