நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படம் இந்த மாதம் 13ம் திகதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன் என திரையுலக பிரபலங்கள் பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தத் திரைப்படத்தின் டிரைலர் கடந்த இரண்டாம் திகதி வெளியானது. இந்த டிரைலர் ரசிகர்களின் ஆதரவினையும் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்