தனுஷின் நடிப்பில் கடைசியாக மாறன் திரைப்படம் வெளியாகி இருந்த நிலையில், இன்னும் பல படங்களில் நடித்து வருகிறார்.இன்னொரு பக்கம், ஐஸ்வர்யா இயக்கி இருந்த 'பயணி' ஆல்பம், பல மொழிகளில் சமீபத்தில் வெளியாகி இருந்தது.
இப்படி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர், திரைப்பட வேலைகளில் பிசியாக இருந்து வந்தாலும், குழந்தைகளுடன் நேரம் செலவிடவும் தவறுவதில்லை. இருவரும் தங்களுடைய குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்தும் வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை நேற்று (04.04.2021), மகன்களுடன் நேரத்தை கழித்து அவர்களுடன் உணவு அருந்திய ஐஸ்வர்யா, மகன்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்திருந்தார்.
அதில், "மகன்கள் மற்றும் ஞாயிற்றுகிழமை. உங்களின் Weekend எப்படி சென்று கொண்டிருக்கிறது?" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.