தளபதி விஜய், நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகி உள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 13ம் திகதி வெளியாகவுள்ளது.
பீஸ்ட் இன் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது. அதிரடி சண்டை காட்சிகள் கொண்ட அந்த டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லீம் லீக் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு முஸ்லீம் லீக் தலைவர் முஸ்தபா தமிழக உள்துறை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
பீஸ்ட் திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து இருப்பதாக கூறி குவைத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் வரும் 13ம் திகதி பீஸ்ட் திரைப்படத்தை வெளியிட்டால் அசாதாரண சூழல் ஏற்படும். இதனால் அப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.