இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அண்மையில் வெளியாகி வெற்றிப்பெற்ற திரைப்படம் ‘மன்மத லீலை’. இந்தத் திரைப்படம் வெங்கட் பிரபுவின் 10வது திரைப்படமாகும்.
இந்த திரைப்படத்தில் நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்து ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் உள்ளிட் நடிகைகள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த திரைப்படத்தின் வெற்றியினை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நடிகர் நாக சைதன்யா நடிக்கும் புதிய திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தத் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.