கடந்த 2018ம் ஆண்டு KGF திரைப்படத்தின் முதலாம் பாகமானது வெளியானது.அதுமட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட பாராட்டப்பட்ட திரைப்படமாகவும் இருந்தது.
இந்த நிலையில் தற்போது இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'யாஷ்' ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார்.
இந்தத் திரைப்படமானது இந்த மாதம் 14ம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அகிலம் நீ என்று தொடங்கும் அம்மா பாடல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.