அன்னாசிபழத்திலுள்ள விற்றமின் 'சி' முகப்பருக்களை எதிர்த்து போராட உதவும் ஒரு விற்றமின் ஆகும்.
மேலும் இது முகப்பருவினால் ஏற்படும் தழும்புகளையும் குறைக்க உதவுகிறது. அன்னாசி பழத்தில் அண்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகம் உள்ளது.
இது சரும சுருக்கங்கள் மற்றும் மென்கோடுகள் போன்ற வயது மூப்பு குறியீடுகளை குறைக்க உதவுகிறது. இதன் காரணமாக நீண்ட நாட்களுக்கு இளமை தோற்றத்தை நீங்கள் தக்க வைக்கலாம். அன்னாசிப்பழம் ஒரு இயற்கையான 'எஸ்போலியேற்றர்' ஆகும்.
இது சருமத்தில் இருந்து இறந்த செல்களை அகற்ற உதவுகிறது. அந்த வகையில் வறட்சியால் வெடிக்கும் உதடுகளை குணப்படுத்த இது உதவுகிறது. சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்கும் பண்பு அன்னாசியில் இயற்கையாகவே உள்ளது.
அந்த வகையில் அதிகப்படியான வறட்சியின் காரணமாக ஏற்படும் பாத வெடிப்புகளை சரி செய்ய அன்னாசிப்பழம் பெரிதும் உதவுகிறது. அடிக்கடி உடைந்துபோகும் மென்மையான நகங்களை உறுதியாக்க அன்னாசி உதவுகிறது.
அன்னாசிப்பழத்தை நன்கு அரைத்து கூழ்நிலையில் நகங்களின் மீது பூசிவர நகங்கள் உறுதியாகும். அன்னாசிப்பழம் சாப்பிடுவதும் அன்னாசி பழ சாறு குடிப்பதும் சூரிய ஒளியால் ஏற்படும் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க உதவும்.
மேலும் இந்த பழத்தில் அதிக அளவு உள்ள ஆண்டி ஆக்ஸிடென்ட்கள் தோல் புற்று நோய்க்கு எதிராக போராடுகிறது. அன்னாசியில் அதிகளவு உள்ள நீர்சத்து மற்றும் ஆக்ஸிஜெனிற் பண்புகள் சருமத்திலும் கூந்தலிலும் ஈரப்பதத்தை மீட்டு எடுக்க உதவுகிறது.
இதன்காரணமாக கூந்தலை மென்மையாக்க அன்னாசி உதவுகிறது. எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி அன்னாசியை உட்க்கொள்வதால் சருமத்திற்கும் உடலுக்கும் அழகையும் ஆரோக்கியத்தையும் பெற்றுக்கொள்ளலாம்.