இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து தற்போது வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி கொண்டிருக்கும் திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணாதாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த வகையில் வெளியான இத்திரைப்படம் இப்போது மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் பல இடங்களில் அதிகாலை 4 மணிக்கு காட்சிகள் திரையிடப்பட்டது. இதனால் இரவு முழுவதும் விஜய்யின் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.இதுதொடர்பான காணொளி காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
கொழும்பு நகரில் உள்ள 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பீஸ்ட் வெளியாகி உள்ளது. கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், விஜய் படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.