நடிகர் சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இத்திரைப்படத்தினை இயக்குனர் கௌதம் மேனன் இயக்குகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்தத் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இதனால், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இந்த வாரத்தில் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.