2018ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்தத் திரைப்படத்தினை தொடர்ந்து கர்ணன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்ட திரைப்படமாகும்.
மேலும் மாறி செல்வராஜ் இயக்குனராக அறிமுகமாவதற்கு முன்பே எழுத்தாளராக இருந்தார்.சில புத்தகங்களையும் எழுதி வெளியிட்டிருந்தார்.அந்தவகையில் "தாமிரபரணியில் கொல்லபடாதவர்கள்", "மறக்கவே நினைக்கிறேன்" எனும் இரு நூல்களும் குறிப்பிட்டு செல்லக்கூடியவை ஆகும்.
இந்நிலையில் இந்த நூல்களை தொடர்ந்து “உச்சினியென்பது” எனும் அவரது முதல் கவிதை தொகுப்பு வெளியாகியிருக்கிறது. இந்த நூலை மாரிசெல்வராஜின் மாமன்னன் திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் வடிவேல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.