நம்மில் சிலர் இப்போது சிறுவயது முதலே இளநரைக்கு ஆளாகிவிடுகின்றனர். முன்னைய காலங்களில் அவ்வாறிருக்கவில்லை.
ஆனால் இன்றைய இளம் தலைமுறையினருக்கு விற்றமின் குறைபாடுகள் காரணமாக நரைமுடி தோன்றிவிடுகிறது. இதற்கு எந்தவிதமான ஷாம்புவினாலும் தீர்வுகாண முடியாது. மாத்திரைகளும் போதிய தீர்வை தருவதில்லை.
எனவே இளநரை முடியை கருமையாக்கக்கூடிய ஒரு 'ஹேர் டை பவுடரை' தயார் செய்து வைத்தாலே போதுமானது. தேவையான நேரங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம். பக்க விளைவுகளும் ஏற்படாது.
முடி உதிர்வையும் கட்டுப்படுத்தும். எனவே இவ்வாறான 'ஹேர் டை பவுடரை' எப்படி தயாரிப்பது என்ற இன்றைய இந்த பகுதியில் பார்ப்போம்.
நம் அன்றாட உணவிலும் , காய்கறிகளிலும், தேவையில்லை என்று தூக்கி எறியும் அதன் தோலிலும் மருத்துவகுணம் அதிகம் நிறைந்துள்ளது.
அவ்வாறே பீர்க்கங்காய் , சுரைக்காய் என்பவற்றை வைத்து துவையல் துவைக்கலாம். மேலும் கீரையின் இலைப்பகுதிகளை பயன்படுத்திவிட்டு , தூக்கி எறிகின்ற காம்புப்பகுதியை கொண்டு சூப் தயார் செய்யலாம். இவ்வாறாக நாம் உணவில் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களிலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. வாழைப்பூவின் தோலை தூக்கி எறிவது அனைவரின் வழக்கம் ஆகும். அதனை எதற்கும் பயன்படாது என்று நாம் எண்ணக்கூடாது.
இந்த வாழைப்பூவின் தோலை பயன்படுத்தி தான் இந்த ஹேர் டை பவுடரை தயார் செய்ய போகின்றோம். எனவே நாம் செய்யவேண்டியது, முதலில் ஆறு வாழைப்பூவின் இதழ்களை எடுத்து சுத்தமான தண்ணீரில் அலசிக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து வாழைப்பூவை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொண்டு அதனை நன்கு வறுக்க வேண்டும்.
நன்றாக கருகும் வரை வறுக்க வேண்டும். வறுத்த பின்னர் அதனை ஒரு தட்டிற்கு மாற்றி நன்கு ஆற வைத்து பின் மிக்ஸியில் இட்டு நன்கு அரைக்க வேண்டும். பின்னர் கண்ணாடி போத்தல் ஒன்றில் போட்டு மூடி வைத்துக்கொள்ளலாம். அதனை உபயோகப்படுத்தும் போது ஒரு பாத்திரத்தில் அரை குவளையில் தண்ணீர் வைத்து அதில் நான்கு கிராம்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த தண்ணீர் கால் குவளை ஆகும் வரை கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்து கொள்ளவேண்டும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள அந்த பவுடரில் ஒரு தேக்கரண்டி பவுடரை எடுத்து அதனுடன் இந்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலவை போல் கலந்துகொள்ள வேண்டும். பின்னர் தலைக்கு குளித்து காய்ந்த முடியில் இந்த கலவையை தடவி சிறிது நேரம் உலர வைத்தால் போதும் உங்கள் முடி கருமையாக மாறிவிடும்.
இதனை தடவியதும் அலசவேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி வந்தால் இளநரையை தவிர்த்து கருமுடியாக்கலாம்.