அழகையும் ஆரோக்கியத்தையும் அள்ளித்தருவதில் காய்கறிகளுக்கு முக்கிய பங்கு உண்டு.
நோய் எதிர்ப்பு சக்தியை கட்டியெழுப்பும் போது செய்ய வேண்டியவையும் செய்ய கூடாதவையும் பற்றிய பட்டியலில் உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் உதவும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களை செய்ய வேண்டியதன் அவசியங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆரோக்கியமான உணவு வழக்கமான உடற்பயிற்சி ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வல்லமை கொண்டவை. இப்போதைய கோடை காலத்திற்கேற்ப குளிர்ச்சியான சாறு மற்றும் உங்கள் சமையல் அறையில் எளிதாக காணக்கூடிய அடிப்படை பொருட்களை கொண்டு தயாரிக்கலாம்.
வெள்ளரிக்காய், கேரட், பீட்ருட், பச்சை மிளகாய், தக்காளி, எலுமிச்சை, தண்ணீர் இவையனைத்தையும் மிக்ஸியில் ஒன்று சேர்த்து சிறிது தண்ணீர் கலந்து அரைக்கவும். இக் கலவையை வடிகட்டி ஒரு எலுமிச்சையை பிழிந்து கலந்து உடனே குடிக்கவும். வெள்ளரி உடலுக்கு குளிர்ச்சி தரும்.
பீட்ருட்டில் இரும்பு சத்தும் லைகோபீன் மற்றும் விற்றமின் 'சி' ஆகியவற்றின் நல்ல மூலமாகவும் உள்ளது. பச்சை மிளகாயில் விற்றமின் 'ஈ' நிறைந்துள்ளது. இது சளி மற்றும் காய்ச்சலுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
இந்த பச்சை காய்கறி சாறு ஒரு முழுமையான விற்றமின் மற்றும் இரும்பு சத்து கலந்த கலவையாகும். இது சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இதனை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் உங்கள் சருமத்தில் நிகழும் நல்ல வித்தியாசத்தை கண்டு நீங்கள் ஆச்சரிய படுவீர்கள்.
உங்கள் தலைமுடி நீளமாகவும் பளபளப்பாகவும் மாறும். எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி சருமத்தையும் முடியையும் பேணி பாதுகாப்போம்.