சிறந்த நடிகராகவும் ,பாடலாசிரியராகவும் ,இயக்குனராகவும் சினிமாத்துறையில் விக்னேஷ்சிவன் வலம் வருகிறார்.இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்.2015ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது,நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவன் அவர்களுக்கும் இடையில் காதல் உருவாக்கியது.இவர்கள் 6 வருடமாக காதலித்து வருகின்றனர்.தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, ஆகியோர் நடிப்பில் ‘காத்து வாக்குல இரண்டு காதல்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனுடன் சென்னையில் உள்ள கோயிலில் சாமி தரிசனம் பெற சென்றார், அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படத்தில், நயன்தாரா நெற்றியில் குங்குமத்துடன் இருப்பதுடன் புகைப்படம் வெளியாகி இருவரும் திருமணம் செய்ததாக பேசப்பட்டது. இந்நிலையில்,வருகின்ற ஜூன் மாதம் முதல் வாரத்தில் இவர்களின் திருமணம் நடைபெறப்போவதாக தகவல் கிடைத்துள்ளன.இந்த விடயம் சமூக வலைத்தளங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது.