முடி உதிர்வு என்பது இன்று பெரும்பாலானவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் ஒன்றாகிவிட்டது. ஒரு நாளைக்கு நூறு முடிகள் வரை உதிர்வடையும் என்பது முடி நிபுணர்களின் கூற்றாகும்.
இருப்பினும் முடி உதிர்தலுக்கேற்ப முடி வளர்ச்சி இல்லை என்றால் நீங்கள் வழுக்கையை எதிர்கொள்ளலாம். சில நாட்களில் முடி வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கும் கிரீம்கள், ஷாம்புகள், மற்றும் எண்ணெய் வகைகள் அதிகளவு உள்ளன.
அவை தொடர்பான விளம்பரங்கள் பாவனையாளர்களை குழப்பமடையவே செய்கின்றன. ஆனால் வீட்டு வைத்தியங்கள் சிறந்த பலனை தருகின்றன. அவ்வாறான ஒரு அழகுக்குறிப்பை தான் இன்றைய பதிவில் பார்ப்போம் முடி உதிர்தலை பூண்டு கட்டுப்படுத்தி நல்ல தீர்வை தருகிறது. செலவும் குறைந்தது.
முடி தொடர்பான பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வல்லமை பூண்டிற்கு உள்ளது. பண்டைய காலங்களிலிருந்து பூண்டு முடிக்கு நன்மை பயக்கும் ஒரு பொருளாக பயன்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. பூண்டு முடி உதிர்தலை கட்டுப்படுத்துவது மட்டுமன்றி முடி வளர்ச்சியையும் அதிகரிக்கின்றது. பூண்டில் 'சல்பர்' உள்ளடக்கம் நிறைந்துள்ளது.
எனவே பூண்டானது முடி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வை தருவதுடன் ஆரோக்கியமான மேனியையும் அடைய பயன்படுகிறது. மேலும் முறையற்ற உணவு முறை காரணமாக உச்சந்தலை மற்றும் முடி ஊடட சத்து குறைபாடடால் பாதிப்படையலாம். பூண்டில் குறைபாடு தேவையை பூர்த்தி செய்ய ஊட்டச் சத்துக்கள் அதிகம் உள்ளன.
இது முடியின் வேர்களுக்கு ஊடடமளிக்கிறது. எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி பூண்டினை பயன்படுத்தி முடி அழகினை பேணுவோம்.