விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழிச்சி மூலமாக மக்களிடத்தில் அதிகம் பேசப்பட்டவர் ஷிவாங்கி. இவர் தீவிர விஜய் ரசிகை ஆவார்.
இந்த நிலையில் நடிகர் விஜய்யின் ’பீஸ்ட்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ஜாலியோ ஜிம்கானா எனும் பாடலின் படப்பிடிப்பு வேளையில் தளபதி விஜய்யை சந்தித்துள்ளார்.மேலும் நடிகர் விஜயை சந்திப்பதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் உதவி செய்ததாக கூறப்பட்டுள்ளது. அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.