பிரபல நடிகர் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் உருவாகும் திரைப்படம் விக்ரம்.இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
தற்போது இந்தத் திரைப்படம் குறித்து ஒரு செய்தி வெளியாகியுள்ளது.அதாவது இந்தத் திரைப்படத்தில் பிளாஷ்பேக் காட்சியில் கமல்ஹாசனை இளமையாக காணபிக்க ஒரு புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும் இதற்காக மட்டுமே பத்து கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்தப் பிளாஷ்பேக் காட்சியில் பத்து நிமிடங்கள் பிரபல கன்னட நடிகை ஷவானி ஸ்ரீவத்ஸவா நடித்துள்ளதாகவும் இவர் நடித்துள்ளக் காட்சி திரைப்படத்தின் ஒரு திருப்புமுனையாக இருக்கும் எனவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.