பொன் நகை எவ்வாறு நமக்கு அழகை தருகிறதோ அதேபோல புன்னகை தான் முகத்திற்கு அழகை கொடுக்கிறது என்றால் மிகையாகாது.
ஒருவர் புன்னகைக்கும் போது பற்கள் மஞ்சள் நிறமாக காணப்படடால் அது அவரது அழகை பாழாக்கும் . அன்றாடம் நாம் சாப்பிடும் பல உணவுகள் பற்களின் அழகையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கின்றன.
இதனால் பற்கள் மஞ்சள் நிறமாக காணப்படுகின்றது. நமது பற்களில் 'எனாமல்' தேய்வதால் பற்களின் இரண்டாம் அடுக்கான மஞ்சள் நிற 'டெண்டின்' தெரிய ஆரம்பிக்கிறது .
உங்கள் பற்களை வெண்மையாக்க நினைத்தால் அதுவும் இயற்கையாக வெண்மையாக்க நினைத்தால் அதற்கு பல வழிகள் உள்ளன. இதற்கு சில பழங்கள் அதற்கு உதவுகின்றன. அத்தகைய பழங்களை தினமும் சாப்பிட்டு வந்தாலே போதும் பற்கள் அழகும் ஆரோக்கியமும் பெறும் . சரி அவற்றை பற்றி இன்றைய அழகு குறிப்பு பகுதியில் பார்ப்போம்.
வாழைப்பழம் - இது பற்களின் ஆரோக்கியத்திற்குஉகந்தது. இதிலுள்ள மக்னீசியம், கால்சியம், மற்றும் மாங்கனீசு போன்றவை பற்களிலுள்ள பற்களிலுள்ள அழுக்குகளை நீக்கி மஞ்சள் கறைகளை போக்கி வெண்மையாக்கும். எனவே தினமும் ஒரு வாழைப்பழம் உண்பது சால சிறந்தது.
ஆப்பிள் - தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதோடு பற்களிலுள்ள மஞ்சள் கறைகளும் நீங்கும். ஏனெனில் இதில் 'மாலிக்' என்ற அமிலம் உள்ளது. இது பற்களுக்கு நன்மை அளிக்கிறது. துறைசார் நிபுணர்களின் கூற்றுப்படி ஆப்பிளில் உள்ள இந்த அமிலம் வாயில் அதிகப்படியான எச்சில் சுரக்க உதவுகிறது என்றும் அதன்விளைவாக பற்களிலுள்ள மஞ்சள் கறைகள் நீங்கும் எனவும் கூறுகின்றனர்.
பப்பாளி - பப்பாளியில் நொதி பொருட்கள் உள்ளது. அந்த நொதியின் பெயர் 'பார்பைன்' ஆகும். இது பற்களை காத்து ஆரோக்கியமளிக்கிறது. மேலும் பற்களை பலமடைய செய்து வெண்மை அளிக்கிறது.
எனவே தினமும் ஆரோக்கியம் தரக்கூடிய பழங்களை உண்பதன் மூலம் பற்கள் அழகும் ஆரோக்கியமும் பெறுவதோடு மஞ்சள் கறைகள் நீங்கி வெண்மையுமளிக்கிறது.