மேலும், இதற்கான வலய மட்டப் போட்டியை எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் நடத்தி முடிக்கும்படி சகல மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கொவிட் அச்சுறுத்தல் காரணமாக அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா கடந்த 2020, 2021 ஆம் ஆகிய இரண்டு ஆண்டுகள் நடத்த முடியாமல் போனது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளின் விளையாட்டுத் திறன் மற்றும் ஆற்றல்கள் வெளிக்கொண்டு வர முடியாமல் போனமை பெரும் துரதிஷ்டமானதாகும்.
மேலும், அவர்களுக்கு தேசிய மட்ட கிண்ணங்கள், சான்றிதழ்களை வென்றெடுக்கக்கூடிய வாய்ப்பற்றுப் போனது. அத்துடன், பல்கலைக்கழக அனுமதிக்கான விளையாட்டு மூலம் கிடைக்கப் பெறும் புள்ளிகளும் அவர்களுக்கு கிடைக்கப் பெறாமல் போயிருந்தமை கவனிக்கத்தக மற்றுமொரு விடயமாகும்.
இந்நிலையில், அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டுப் போட்டிகளின் முதற் கட்டமான வலய மட்ட போட்டிகள் மே மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னரும், இரண்டாம் கட்டமான மாகாண மட்ட போட்டிகள் ஜூன் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்டடெம்பர் மாதம் 10 ஆம் திகதிக்குள் முடிக்கும்படி மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு சுற்று நிரூபமொன்றின் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிடுகின்றது.
இதன்படி, மெய்வல்லுநர் உள்ளிட்ட 32 வகையான போட்டிகள் அடங்கிய அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.