திரையிசையில் தனக்கென ஒரு தனியிடத்தை கொண்டிருப்பவர் தேனிசை தென்றல் தேவா , கானா பாடல்களின் தந்தை என்று வர்ணிக்கப்பட்டாலும் இவரது காதல் பாடல்கள் தனித்துவமானவை.
அந்தளவுக்கு அவரது பாடல்களுக்குள் ராகங்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும். மனசுக்கேத்த மகாராசா என்ற படம் மூலம் தமிழ் திரையிசையில் கால் பதித்திருந்தாலும் இன்று வரை பல நூற்று கணக்கான படங்களுக்கு இசை வழங்கியுள்ளார்.
நடிகர் ஜெய் ஆகாஷின் நடிப்பில் அண்மையில் உருவான அமைச்சர் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அதில் 'தூள் பறக்குது' என்ற பாடலையும் அவரே பாடியுள்ளார்.
ஒரு குறிப்பிடட கால இடைவெளிக்கு பின்னர் தேவாவின் குரலில் பாடலை கேட்க ரசிகர்கள் ஆர்வமாகவுள்ளார்கள்.