Motorola நிறுவனம் தனது புதிய Mid Range Edge 30 Smartphoneனை இந்திய சந்தையில் மே 12ம் திகதி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.
முன்னதாக பெப்ரவரி மாதத்தில் Moto Edge 30 Pro Smartphone அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த Smartphone அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதிய Motorola எட்ஜ் 30 Smartphone இந்தியாவில் Qualcomm Snapdragon 778G+ Processorடன் அறிமுகமாகும் முதல் மொடலாக இருக்கும். புதிய Moto smartphone அளவில் 6.79mm மெல்லியதாக இருக்கும் என Motorola அறிவித்துள்ளனர். மேலும் இது உலகின் மிக மெல்லிய 5G smartphone என Motorola அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.