பீஸ்ட் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'தளபதி 66' இல் தளபதி விஜய் நடித்து வருகிறார். இத்திரைப்படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வர இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இத்திரைப்படம் விஜய்யின் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற குடும்ப பின்னணி திரைப்படமாக உருவாகிறது.
'தளபதி 66' இன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில் 2ம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் இப்படத்தின் இணைந்துள்ள நடிகர்கள் குறித்து படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி நடிகர் சரத்குமார் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு நடிகர் பிரபு, பிரகாஷ் ராஜ், நடிகை ஜெயசுதா ஆகியோரும் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
