தமிழ் சினிமாவில் தற்போது பிரபல இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் விக்னேஷ் சிவன்.இவருடைய இயக்கத்தில் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வரும் திரைப்படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்" .
இத்திரைப்படம் வெளியாகிய இரண்டு நாட்களில் 11 கோடியை வசூல் செய்துள்ளது.இதனையடுத்து உலகம் முழுவதும் நான்கு நாட்களில் 34 கோடியையும் வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில் இத்திரைப்படம் வெளியாகி பதினொரு நாட்கள் நிறைவடைந்த நிலையில் 50 கோடி வசூலை நெருங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இன்னும் இரண்டு நாட்களில் இத்திரைப்படத்தின் வசூல் 50 கோடியைத் தாண்டும் என்றும் கூறப்படுகிறது. உலகம் முழுவதும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெறும் திரைப்படமாக இந்தத் திரைப்படம் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.