Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
10
கிராமத்து சுவையில் சிம்பிளான மீன் குழம்பு

Sooriyan FM Gossip - கிராமத்து சுவையில் சிம்பிளான மீன் குழம்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

830 Views
கிராமங்களில் செய்யக்கூடிய எளிமையான மீன் குழம்பை எவ்வாறு செய்ய வேண்டும் ?
தேவையான பொருட்கள்:
மீன் – அரை கிலோ,
வெங்காயம் – 2,
தக்காளி – 4,
பச்சை மிளகாய் – 2,
வரமிளகாய் – 2,
மிளகாய் தூள் – 1 கரண்டி,
மஞ்சள்தூள் – அரை கரண்டி,
புளி – எலுமிச்சை பழ அளவு,
உப்பு – ஒரு கரண்டி,
எண்ணெய் – 100 கிராம்,
கடுகு – ஒரு கரண்டி,
சீரகம் – ஒரு கரண்டி,
வெந்தயம் – அரை கரண்டி,
கருவேப்பிலை – ஒரு கொத்து.
கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

செய்முறை:

முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இரண்டு பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்க வேண்டும். பின்னர் எலுமிச்சைப்பழ அளவு புளியை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும்.

பிறகு புளியை நன்றாக கரைத்து வடிகட்டி புளிக்கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அரை கிலோ மீனை சுத்தம் செய்து, இரண்டு, மூன்று முறை நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவி, அதனுடன் அரை கரண்டி, மஞ்சள் தூள் மற்றும் அரை கரண்டி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மீனில் வரும் ரத்த வாசனை குறைந்துவிடும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு சட்டியை வைக்கவேண்டும். பிறகு சட்டி நன்றாக சூடானதும் அதில் 100 கிராம் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் ஒரு கரண்டி, கடுகு, ஒரு கரண்டி, சீரகம் மற்றும் அரை கரண்டி, வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு கரைத்து வைத்துள்ள புளி தண்ணீருடன் 3 கரண்டி, மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு இந்த கரைசலையும் தக்காளி, வெங்காயத்துடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். குழம்பு கொதித்து மிளகாய்த்தூள் வாசனை சென்றதும் சுத்தம் செய்து வைத்துள்ள மீனை போட்டு, அடுப்பை சிம்மில் வைத்து, பத்து நிமிடத்திற்கு அப்படியே வேகவிடவேண்டும்.

இறுதியாக கொத்தமல்லி தூவினால் சுவையான மீன் குழம்பு தயாராகிவிடும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top