கமல் ஹாசனின் விக்ரம் படத்தில் சூர்யா நடிப்பது குறித்த உண்மை தெரிய வந்திருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன்,விஜய் சேதுபதி,ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கும் விக்ரம் படம் ஜூன் 3ம் திகதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.
விக்ரம் படத்தில் கவுரவ வேடத்தில் சூர்யா நடிப்பதாக தகவல் வெளியானது.இது குறித்து விக்ரம் படக்குழுவுக்கு நெருக்கமான ஒருவர் கூறியதாவது,விக்ரம் படத்தில் சூர்யா கவுரவ வேடத்தில் வருகிறார்.அண்மையில் சென்னையில் வைத்து அவரின் காட்சிகள் படமாக்கப்பட்டது. கிளைமாக்ஸில் வருவார் என்றார்.
கிளைமாக்ஸில் ஏதோ சிறப்பான,தரமான சம்பவம் காத்திருக்கிறது.அதனால் தான் சூர்யாவை அழைத்து வந்திருக்கிறார் ஆண்டவர் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
விக்ரமில் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.மாஸ்டரில் விஜய் சேதுபதியை மாஸாக காட்டிய லோகேஷ் கனகராஜ் விக்ரமில் என்ன செய்து வைத்திருக்கிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.