தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் நடிகர் அஜித்.அவர் தற்போது நடிக்க இருக்கும் திரைப்படம் ’AK 61’ .
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் "AK 61’. இந்தத் திரைப்படத்தில் ஜான் கொகேன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் 2015ம் ஆண்டு வெளியான ’ராஜதந்திரம்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் வீரா, "AK 61’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகின்றது.இந்த விடயம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.