இயக்குனர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் "சென்டிமீட்டர்".
இந்தத் திரைப்படத்தில் அசுரன் திரைப்பட நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.மேலும் நெடுமுடி வேணு, யோகி பாபு, காளிதாஸ் ஜெயராம், கோகுல் ஆனந்த் உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
மேலும் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிகட்ட வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 'சென்டிமீட்டர்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரை தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.