36,258 Views
அஜித் நடிப்பில் நேற்று வெளியாகிய வேதாளம் திரைப்பட த்தின் வசூல் தொடர்பான சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகிய வண்ணமுள்ளன.
தமிழ் திரைப்படங்களின் வசூல் விபரத்தை அதன் தயாரிப்பாளர்கள் உத்தியோகபூர்வமாக வெளியிடுவதில்லை. வரி செலுத்துதல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இவை மறைக்கப்படுகின்றன.
இவற்றை சுயாதீனமாக ஊர்ஜிதப்படுத்திக்கொள்வது சற்று சிரம மானது. எனினும் வசூல் விபரங்களை ஓரளவுக்கு உண்மையாக வழங்க க்கூடிய யாருக்கும் சார்பில்லாத பல தனிபர்கள் மற்றும் இணையத்தளங்கள் உள்ளன.
தென்னிந்திய திரைப்பட ஆய்வாளர்கள் சிலர் வசூல் நிலவரங்களை நீண்டகாலமாக வழங்கி வருகின்றனர்.
இவர்களின் பலர் டுவிட்டர் போன்ற சமூகவலைதளங்களின் ஊடாக வசூல் நிலவரங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இதனடிப்படையில் வேதாளம் திரைப்பட த்தின் முதல் நாள் வசூல் விபரங்கள் இதோ:
பொதுவாக தமிழ்நாட்டில் படம் வசூலிக்கும் தொகையை அடிப்படையாக வைத்தே , படத்தின் வெற்றி பகுதியளவில் தீர்மானிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில் வேதாளம் முதல் நாளில் மட்டும் தமிழ் நாட்டில் 15 -17 கோடி ரூபா (இந்திய நாணயம்) என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் , ரசிகர்களுக்கான விசேட காட்சி ஆகியவற்றுடன் ஒப்பிட்டால் இது 20 கோடிக்கும் அதிகமென வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை நாள் சாதனையாக இருந்த ரஜினியின் லிங்காவை , வேதாளம் இலகுவாக முந்திவிட்டதாகவும் , அஜித்துக்கு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் ரசிகர் எண்ணிக்கையே இதற்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது.
அதுமட்டுமன்றி , வேதாளம் தனியாக வெளியாகவில்லை மாறாக மற்றுமொரு பெரிய நடிகரான கமல் ஹாசனின் தூங்காவனத்துடன் வெளியாகியது.
அதையும் மீறி வேதாளம் தமிழ் நாட்டில் வசூலித்துள்ள தொகையானது பலரை திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.
#Vedalam at the box-office - Phenomenal record Opening across Tamil Nadu. #Ajith once again proves he is the emperor of Opening.
— Sreedhar Pillai (@sri50) November 10, 2015
Thala Ajith's #Vedalam shatters all existing Tamil Nadu opening box-office records by huge margin! Day 1 collection close to 15 Crs. Theri!!
— Kannan (@TFU_Kannan) November 11, 2015
Till now, only solo rels hv attained "All-Time No.1 Opener in TN".. 1st time, a non-solo rel #Vedalam has done it.. #Thala 's Opening Power!
— Ramesh (@rameshlaus) November 11, 2015
All Areas Have Reported Record Collections. Few Theaters Played 24 Hours Shows With A Gap Of 15-20 Minutes. Outstanding. #Vedalam
— Tamil Cinema (@BoAnalyst) November 11, 2015
Ajith's #Vedalam Makes An All Time Record Of A Monstrous 16.65c On Day One In Tamilnadu. Earth Shattering Opening.
— Tamil Cinema (@BoAnalyst) November 11, 2015
இது இந்தியா முழுவதுமான வசூல் குறிப்பாக , கேரளா , கர்நாடகா வசூலும் எதிர்ப்பார்த்தை விட சிறப்பாகவுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதுதவிர இலங்கை , லண்டன் , அமெரிக்கா, மலேசியா , பிரான்ஸ் என அனைத்து வெளிநாடுகளிலும் வசூல் அமோகமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் படம் வசூலில் சாதனை நட த்துவது நிச்சயம் என திரைத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
தயாரிப்பாளர் , திரையரங்க உரிமையாளர்கள் என அனைவருக்கும் இலாபகரமான ஆண்டாக இத்திரைப்படம் அமையுமென தெரிவிக்கப்படுகின்றது.
படம் கலவையான விமர்சன த்தை சந்தித்துள்ள போதிலு அஜித் என்ற நடிகரே வசூலுக்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது. மேலும் படம் தன்னை மீண்டும் 'கிங் ஒப் ஓப்பனிங்' ஆக நிரூபித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேபோல், வேதாளத்துடன் வெளியாகிய தூங்காவனம் சிறப்பான விமர்சன ங்களை அள்ளியுள்ளது. மேலும் வசூலும் ஒப்பீட்டளவில் நன்றாகவே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.