நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் அசத்தி வருகிறார். 'கோலமாவு கோகிலா' திரைப்படம் யோகி பாபுவிற்கு மிகுந்த வரவேற்பைப் பெற்றுத்தந்தது. இவர் தற்போது ரஜினியின் 'ஜெயிலர் 2' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தற்போது யோகி பாபு, விநீஷ் மில்லினியம் இயக்கத்தில் 'ஜோரா கைய தட்டுங்க' என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
மாயாஜால வித்தையை நிகழ்த்தும் கலைஞரின் வாழ்வியலை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகியுள்ளது .
இந்தத் திரைப்படம் இம்மாதம் 16ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இத்திரைப்படத்தின் Teaser ஐ தற்போது திரைப்படக்குழு வெளியிட்டுள்ளது.