விஜய் தேவரகொண்டா தற்போது அவரது 13 ஆவது திரைப்படமான 'கிங்டம்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இத்திரைப்படத்தை இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கியுள்ளார். கௌதம் தின்னனுரி இதற்கு முன் 'ஜெர்ஸி' , 'மல்லி ராவா' ஆகிய திரைப்படங்களை இயக்கி, அவற்றுக்கு தேசிய விருதுகளையும் வென்றுள்ளார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
'கிங்டம்' திரைப்படத்தின் தமிழ் டீசருக்கு நடிகர் சூர்யா குரல் கொடுத்துள்ளார். இத்திரைப்படம் எதிர்வரும் 30 ஆம் திகதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், 'கிங்டம்' திரைப்படம் எதிர்வரும் 30 ஆம் திகதிக்குப் பதிலாக ஜூலை 4 ஆம் திகதி வெளியாகும் என திரைப்படக்குழு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் விஜய் தேவரகொண்டா அனிருத்தின் மேல் உள்ள அன்பை பற்றி உரையாற்றியிருந்தார். அதில் "எனக்கு அனிருத்தை அவரது 3 மற்றும் VIP படங்களில் இருந்து பிடிக்கும்.
நான் அப்போது நடிகனாக இல்லை. அப்போது யோசிப்பேன் நாம் ஒரு நாள் நடிகனாக ஆனால், நம் திரைப்படத்திற்கு அல்லது நாம் வரும் காட்சியில் அனிருத்தின் இசை இடம்பெற்றிருக்க வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் அது இத்தனை வருடங்கள் கழித்து "கிங்டம்" திரைப்படத்தில் நடந்துள்ளது.
நான் மட்டும் ஒரு அரசனாக இருந்தேன் என்றால் அனிருத்தை கடத்திச் சென்று என் அரண்மனையில் வைத்து என் அனைத்து திரைப்படங்களுக்கும் அனிருத்தை இசையமைக்க சொல்லுவேன் " என குறிப்பிட்டுள்ளார்.