"கண்ணப்பா" திரைப்படத்தின் Trailer குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது !
தெலுங்கில் வரலாற்று புதினத்தைத் தழுவி உருவாகியிருக்கும் ஆன்மீக திரைப்படம் 'கண்ணப்பா'.
மிகவும் பிரபலமான மகாபாரதம் தொடரை இயக்கிய பொலிவுட் இயக்குநர் முகேஷ் குமார் சிங் இத்திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் வேடத்தில் நடித்துள்ளார்.
மேலும், மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்சய் குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
'கண்ணப்பா' திரைப்படம் எதிர்வரும் 27ஆம் திகதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் , கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
இத்திரைப்படத்தின் Making Vedio அண்மையில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் 'கண்ணப்பா' திரைப்படத்தின் Trailer இம்மாதம் 13ஆம் திகதி வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.