மெட்டா நிறுவனம் பல்வேறு புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி, அதை வெகுவாக மேம்படுத்தியும் வருகிறது.
அந்தவகையில்,இப்போது Videoக்களை Animation Stickers ஆக மாற்றக்கூடிய வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலமாக, உங்களுக்குப் பிடித்த Video காட்சிகளை, வேடிக்கையான Stickers ஆக மாற்றி, உங்கள் உரையாடல்களில் பயன்படுத்தலாம்.
இதில் ஆறு புதிய அம்சங்கள்(Effects) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.இந்த Effects, Video அழைப்புகளை மேலும் ஈடுபாட்டுடனும் சிறப்பாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
மேலும் WhatsApp channelsகளில் உள்ள வாக்கெடுப்பு விருப்பங்களில் புகைப்படங்களைச் சேர்க்க பயனர்களை அனுமதிக்கிறது.
இந்தப் புதிய அம்சம் வாக்கெடுப்புகளை மேலும் கவர்ச்சியாக மாற்றும் என்று தெரிவிக்கப்படுகிறது.