ஜெட் விமானங்கள் வானில் பறக்கும்போது வெள்ளைக் கோடுகள் போல் காட்சியளிக்கும்.
அதனை நாம் பார்க்கும்போது விமானங்கள் வெளியிடும் புகை என்றுதான் நினைத்திருப்போம். ஆனால், உண்மையில் அது புகை இல்லை என்பதுதான் உண்மை.
ஜெட் போன்ற அதிவேக எஞ்சின் கொண்ட விமானங்களில் இருந்து நீராவி வெளியேற்றப்படுகிறது. இந்த நீராவி வானில் குளிர்ந்த காற்றுடன் கலந்து, பனித்துளியாக மாறுவதால் நமக்கு வெள்ளைக் கோடுகளாக காட்சியளிக்கின்றன.
அதாவது, பூமியில் இருந்து பல்லாயிரம் அடி உயரத்தில் குளிர்ந்த சூழல் நிலவும். இதில் ஜெட் விமானத்தின் சூடான நீராவி உறைந்து போகிறது.
இதுவே நாம் கீழே இருந்து பார்க்கும்போது அவை கோடுகளாக நம் கண்களுக்கு தெரிகின்றன.