‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் எழில் இயக்கத்தில் 2013ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘தேசிங்குராஜா’.
தற்போது, இத்திரைப்படத்தின் 2ஆம் பாகம் வெளியாகவுள்ளது.
பத்து வருடங்களுக்குப் பின்னர் வெளியாகவுள்ள இந்தத் திரைப்படத்தில் விமல் கதாநாயகனாக நடித்துள்ளார்.
தெலுங்கு நடிகைகளான பூஜிதா பொன்னடா மற்றும் ஹர்ஷிதா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள்.
‘தேசிங்குராஜா-2’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.
கல்லூரியில் படிக்கும் 4 நண்பர்களின் கதையை மையமாக வைத்து, நகைச்சுவைக் கலந்து உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தை விரைவில் வெளியிட திரைப்படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் திரைப்படத்தின் டீசரை திரைப்படக் குழு வெளியிட்டுள்ளது.