தமிழ் சினிமாவில் 'சுப்பிரமணியபுரம்', 'எங்கேயும் எப்போதும்' போன்ற திரைப்படங்களின் மூலம் இரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றவர் நடிகர் ஜெய்.
தற்பொழுது இயக்குநர் பாபு விஜய் தயாரிக்கும் 'சட்டென்று மாறுது வானிலை' என்ற திரைப்படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார். மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடிக்கிறார்.
இவர்களுடன் யோகிபாபு, KGF புகழ் கருடா ராம், ஶ்ரீமன், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் 'சட்டென்று மாறுது வானிலை' திரைப்படத்தின் First Look போஸ்டரை திரைப்படக்குழு வெளியிட்டுள்ளது.