இயக்குநர் Joseph Kosinski இயக்கத்தில் நடிகர் Brad Pitt நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய Hollywood திரைப்படமான 'F1' திரைப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.
இத் திரைப்படம் வெளியாகி 4 வாரங்களைக் கடந்துள்ள நிலையில் வசூலில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.
Car Raceஇனை மையமாகக் கொண்டு வெளியாகியுள்ள 'F1' திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் இந்திய மதிப்பில் ரூ. 3,626 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இந்த ஆண்டு வெளியாகி அதிக வசூல் செய்த திரைப்படங்களுள் 'F1' திரைப்படம் முக்கிய இடத்தில் உள்ளது.
இந்தியாவில் மட்டும் 'F1' திரைப்படம் இந்திய மதிப்பில் ரூ. 76.5 கோடி வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.