ஹொங் கொங் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கையின் முன்னாள் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர் கௌஷால் சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஆசியக்கிண்ணத் தொடரில் ஹொங் கொங் அணி விளையாடவுள்ள நிலையில், அந்த அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கௌஷால் சில்வா செயற்படவுள்ளார்.
கௌஷால் சில்வா 2011ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டுவரை இலங்கை அணிக்காக 39 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளமை
குறிப்பிடத்தக்கது.