தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் சமீபத்தில் 'குபேரா' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனுஷின் இட்லி கடை, தேரே இஷ்க் மெயின் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகத் தயாராக உள்ளன.
இந்த நிலையில், நடிகர் தனுஷ் அடுத்ததாக தனது 54ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தினை 'போர் தொழில்' இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கிவரும் நிலையில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்துவருகிறார், இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது இரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.