திரைத்துறையில் 50 ஆண்டுகள் நிறைவுசெய்துள்ள Super Star ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் கடந்த 14ஆம் திகதி உலகமெங்கும் வெளியானது.
வெளியான முதல் நாளில் உலகமெங்கும் 'கூலி' திரைப்படம் இந்திய மதிப்பில் ரூ. 151 கோடி வசூல் செய்ததாகத் தயாரிப்பு நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.
தற்போது வரை கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் 'கூலி' திரைப்படம் 3 நாட்களில் உலகெங்கும் இந்திய மதிப்பில் ரூ. 310 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.