46 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் இணைந்து நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்த்திரையுலகின் முக்கிய நடிகர்களான ரஜினி மற்றும் கமல் 1979 இல் வெளிவந்த 'நினைத்தாலே இனிக்கும்' திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர் அதன் பிறகு மேலும் பல திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
இந்தநிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும், உலக நாயகன் கமல்ஹாசனும் இணைந்து நடிக்கப்போகும் புதிய திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது கமலின் 235 ஆவது திரைப்படமாகவும், ரஜினியின் 173ஆவது திரைப்படமாகவும் இருக்கும். சமீபத்தில் ரஜினியை வைத்து லோகேஷ் இயக்கிய 'கூலி' திரைப்படம் வெளியாகி 4 நாட்களில் இந்திய மதிப்பில் ரூபாய். 400 கோடிக்கும் மேல் வசூலித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.