இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி,நித்யா மேனன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான 'தலைவன் தலைவி' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
நடிகர் விஜய் சேதுபதியின் 52ஆவது திரைப்படமான 'தலைவன் தலைவி' திரைப்படம், குறிப்பாக குடும்பங்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூலை அள்ளியது.
அந்த வகையில், இத் திரைப்படம் உலகம் முழுவதும் இந்திய மதிப்பில் ரூ.100 கோடி வசூல் செய்து BLOCKBUSTER Hit கொடுத்துள்ளதாகத் திரைப்படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.