Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
16
இதுதான் இட்லிக் கடை திரைப்படத்தின் கதையா?

SooriyanFM Gossip - இதுதான் இட்லிக் கடை திரைப்படத்தின் கதையா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

244 Views
தமிழ் சினிமாவில் தனுஷ் எந்தத் திரைப்படத்தில்  நடிக்கிறாரோ, அந்தத் திரைப்படத்துக்கு எப்போதுமே பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். தற்போது அவர் இயக்கி, நடித்து வரும் திரைப்படம் “இட்லிக்கடை”. இந்த படத்தின் கதை பற்றி இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவராத நிலையில், சமூக வலைதளங்களில் மொத்தக் கதையும் பரவலாகப் பேசப்படுகிறது.

வெளியான தகவல்களின்படி, தனுஷ் இந்தத் திரைப்படத்தில் ஒரு சாதாரண மனிதராக வருகிறார். அவருடைய மனைவியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். ஷாலினி பாண்டே தங்கையாக நடித்திருக்கிறார்.

கதையில் முக்கியமான திருப்பம் என்னவென்றால் – அந்தத் தங்கை சத்யராஜ் குடும்பத்தில் திருமணம் செய்து கொள்கிறார். அந்தக் குடும்பம் செல்வந்தமும், செல்வாக்குமுள்ளதாகக் காட்டப்படுகிறது. அந்த வீட்டின் மருமகனாக அருண் விஜய் வருகிறார். இந்தக் கதாபாத்திரமே படத்தில் மிகப்பெரியளவில் பேசப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அந்தக் குடும்பங்கள் இரண்டிற்கும் இடையில் ஏற்படும் முரண்பாடு, தங்கை மீது தனுஷ்க்கு இருக்கும் பாசமும், அண்ணன்-தங்கை சென்டிமென்ட்டும் கதையின் மையமாக மாறுகிறது. இதைத் தொடர்ந்து, அருண் விஜய் – தனுஷ் இடையே நேரடி மோதல் வருகிறது.

திரைப்படத்தின் கிளைமாக்ஸ் M. குமரன் Son of Mahalakshmi பட பாணியில் இருக்கும் என வதந்திகள் கிளம்பியுள்ளன. அதாவது, செண்டிமெண்ட் மற்றும் sports action கலந்த ஒரு பெரிய எமோஷனல் கிளைமாக்ஸாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

எது எப்படியிருந்தாலும் இட்லி கடை திரைப்படத்தின் உண்மையான கதைக்களத்தை அறிந்துகொள்ள ஒக்டோபர் வரைக்கும் காத்திருக்கத்தான் வேண்டும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top