40 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால்.
மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் 400ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் மோகன்லால், பத்மஸ்ரீ விருது, பத்ம பூஷண் விருது, தாதாசாகேப் பால்கே விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.
அதே சமயத்தில் இந்தியப் பிராந்திய இராணுவத்தில் கௌரவ Lieutenant colonel பதவியையும் மோகன்லால் வகிக்கிறார்.
இந்த நிலையில், நேற்று புதுடெல்லியில், இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, 7 தளபதிகள் முன்னிலையில், மோகன்லாலுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கி கௌரவித்தார்.