இயக்குனர் லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில் உருவாகிவரும் திரைப்படம் பென்ஸ், இந்தத் திரைப்படத்தின் கதாநாயகனாக ராகவா லோரன்ஸ் நடித்துவருகிறார். இந்தத் திரைப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார், லோகேஷ் கனகராஜ் இத்திரைப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.
லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்சில் ஒரு அங்கமாகவே இந்தத்திரைப்படம் வெளிவர இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் மாதவன், நடிகர் ரவி மோகன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர், சாய் அபயங்கர் இந்தத் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில் மலையாள நடிகர் நிவின் பாலியும் இத்திரைப்படத்தில் நடிக்கிறார் என படக்குழுவினர் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு காணொளியை வெளியிட்டு அறிவித்திருந்தனர். தற்போது பென்ஸ் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்து நடிகர் நிவின் பாலி இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.