புதுமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜூடன் இணைந்து அர்ஜூன் தாஸ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை விமர்சையாக நடைபெற்றுள்ளது.
இத்திரைப்படத்தில் மலையாள நடிகை அன்னா பென் கதாநாகியாகவும் யோகி பாபு மற்றும் வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இமையமைக்கிறார்.
இத்திரைப்படத்தின் பூஜையை தொடர்ந்து சென்னை, மங்களூரு, மும்பை ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
திரைப்படத்தின் தலைப்பு, மற்ற விபரங்கள் ஒவ்வொன்றாக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.