நடிகர் ப்ரித்வி ராஜ் மற்றும் கரீனா கபூர் ஆகியோர் இயக்குநர் மேக்னா குல்சர் இயக்கத்தில் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு "தாய்ரா" எனப்பெயரிடப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் நடிகர் ப்ரித்வி ராஜ் காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்தாண்டு இத்திரைப்படம் திரைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.