'ராக்கி' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் கன்னட நடிகர் யாஷ். அதைத் தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான 'KGF' திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார் யாஷ்.
இதைத் தொடர்ந்து நடிகர் யாஷ் 'Toxic' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை இயக்குநர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார். இத்திரைப்படம் Drug Mafia உலகில் நடக்கும் கேங்ஸ்டர் டிராமாவாக இருக்கும் என திரைப்படக்குழு தெரிவித்திருந்தது.
கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் இத்திரைப்படம் மார்ச் மாதம் 19ஆம் திகதி வெளியாகும் என திரைப்படக்குழு அறிவித்துள்ளது.
யாஷ் , கியாரா அத்வானி, நயன்தாரா ஆகியோரின் கதாபாத்திர பெயர்களுடன், போஸ்டர்களை திரைப்படக்குழு வெளியிட்டு Update கொடுத்திருந்த நிலையில், 'Toxic' திரைப்படத்தில் 'மெலிசா' என்ற வேடத்தில் ருக்மணி வசந்த் நடித்துள்ளதாக திரைப்படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.