தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜீவா. இவர் நடிப்பில் உருவாகி வெளிவந்த 'தலைவர் தம்பி தமையில்' திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்பெற்று வருகிறது.
மலையாள இயக்குநர் நிதேஷ் சஹாதேவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் இளவரசு, தம்பி ராமையா, பிரார்த்தனா நாதன், ஜென்சன் என பலரும் நடித்துள்ளனர். இதேவேளை இத்திரைப்படம் வெளியாகி மூன்று நாட்களைக் கடந்துள்ள நிலையில், இத்திரைப்படம் இந்திய மதிப்பில் உலகளவில் ரூ. 11+ கோடி வசூல் செய்துள்ளது.