20 அணிகள் பங்கேற்கும் 10ஆவது 20 ஓவர் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி பெப்ரவரி 7ஆம் திகதி முதல் மார்ச் 8ஆம் திகதி வரை இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ளது.
இதனிடையே டி20 உலகக்கிண்ண போட்டிக்கான 15 பேர் கொண்ட அவுஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் இடம் பெற்றிருந்த கம்மின்ஸ் காயம் காரணமாக இந்தத் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
மேலும், மேட் ஷார்ட்டும் தொடரில் இருந்து விலகினார்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசில்வுட் டி20 உலகக் கிண்ணத்தின் ஆரம்ப போட்டிகளைத் தவறவிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அவுஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய தொடரில் ஆஸ்திரேலியா ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.