இந்திய சினிமா மட்டுமின்றி ஹொலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வரும் நடிகர் தனுஷ், நடிப்பு மட்டுமின்றி திரைத்துறையில் பல பணிகளில் தீவிரமாக இயங்கி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஹிந்தி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், நடிகர் தனுஷுக்கு எதிராக பிரபல படத்தயாரிப்பு நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது கடந்த 2016 ஆம் ஆண்டு 'நான் ருத்ரன்' என்ற திரைப்படத்திற்காக தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், அந்தத் திரைப்படத்துக்கு பதில், வேறு திரைப்படத்தை நடித்து இயக்கி தருவதாக நடிகர் தனுஷ் கூறியுள்ளார். அதை ஏற்று, தனுஷ் உள்பட திரைப்படத்தில் நடித்த நாகார்ஜுனா, எஸ்.ஜே.சூர்யா போன்ற நட்சத்திரங்களுக்கு முன்பணம், பிற செலவினங்களுக்காக, 20 கோடி ரூபாய் வரை செலவிட்ட நிலையில், தனுஷ் முழுமையான திரைக்கதையை வழங்காமல், பிற திரைப்படங்களுக்கு கால்ஷீட்டுகளை கொடுத்ததாலும் இந்தப் திரைப்படம் பாதியிலேயே முடங்கியதாகக் கூறி, தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் வழக்கறிஞர் ஏ.சிதம்பரம், நடிகர் தனுஷுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.